மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
இன்று வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெறுவதை முன்னிட்டு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு துவங்கியது.
இந்நிலையில் தற்போது உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி பின்தங்கியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராயை விட ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னைடவை சந்தித்துள்ளார்.
வயநாடு மற்றும் ராய் பரேலி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி முன்னிலை வகித்துள்ளார்.