தீபாவளி வாழ்த்து தெரிவித்த கத்தார் அரசருக்கு நன்றி தெரிவித்த மோடி..!

இந்தியா கத்தார் இடையேயான நட்புறவு, அடுத்தாண்டுடன் 50 – ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனை கொண்டாட இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்ட நிலையில் , பிரதமர் மோடியும், கத்தார் அரசர் அமீர் தமீம் பின் ஹமத் தானி தொலைபேசியில் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

மேலும் இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தீபாவளி வாழ்த்து தெரிவித்த அரசருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வெற்றிகரமாக நடைபெற தனது வாழ்த்துக்கள் என்றும், 2023-ல் 50 – ஆண்டுகால இந்தியா-கத்தார் உறவுகளை கூட்டாக கொண்டாட நாங்கள் ஒப்புக்கொண்டோம்,’ என்று தெரிவித்துள்ளார்.