மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் – திமுக மனு

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட தேர்தல் 57 லோக்சபா தொகுதிகளுக்கு வருகிற ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் 31 ஆம் தேதி தியானம் செய்ய உள்ளார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி கன்னியாகுமரியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமீறல். இதன் மூலம் பிரதமர் மோடி மறைமுகமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News