இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளா்களில் மிக உச்ச நட்சத்திரமாக விளங்கியது முகமது ஷமி. அதிலும், கடந்த 2023 ஐசிசி உலகக்கோப்பை வரை இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷமி ,7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றாா்.
மேலும் ,இவரது சிறப்பான விளையாட்டை கௌரவப்படுத்தும் வகையில், சிறந்த கிரிக்கெட்டருக்கான அா்ஜுனா விருதையும் தட்டிச்சென்றாா்.இதைத்தொடர்ந்து, இவாின் நெருங்கிய நண்பரான முன்னாள் பெங்கால் அணி வீரர் ஒருவா் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளாா்.அவா் கூறியிருப்பதாவது, ஷமிக்கு நீண்டகாலமாக இடது குதிகாலில் பிரச்சினை உள்ளது. அவர் உலகக் கோப்பையின் போது வலிக்காக ஊசி போட்டுக் கொண்டுதான் விளையாடினார் என்பதும் பல போட்டிகளில் வலியுடன்தான் விளையாடினார் என்பதும் இங்குப் பலருக்குத் தெரியாது. வயதாக வயதாக ஒவ்வொரு காயத்திலிருந்தும் வலியிலிருந்தும் மீள்வது சிரமமாகவே இருக்கும்” என்றார்
இப்போது மட்டுமில்லை 2015ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின்போதும், ஷமிக்கு முழங்கால் வீக்கம் இருந்தது. அவர் அறுவை சிகிச்சையை விடுத்து, இந்தியாவுக்காக விளையாட ஊசி போட்டு விளையாடினார் என்பதும் நினைவுக்கூரத்தக்கது. இந்த தகவலை ஷமியே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.