மோகன் ஜி இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பகாசூரன். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து, வரும் 17-ஆம் தேதி அன்று, ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், இந்த படம் தோல்வி அடைய வாழ்த்துகள் என்று கூறி, நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி தந்த இயக்குநர் மோகன் ஜி, நீ உன் குல தெய்வத்தையே வேண்டி ஒரு பக்க காதை அறுத்துக்கிட்டாலும் அது நடக்காது.. படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.