பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன். இந்த படத்திற்கு பிறகு, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களை எடுத்துள்ளார்.
அஜித்தின் தீவிர ரசிகரான இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “உங்களுடைய வருகைக்காக காத்திருக்கிறோம் தல.. விடாமுயற்சி படத்தின் ஷீட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என்று கேள்விப்பட்டேன்..
நிறைய ரசிகர்கள், உங்களை திரையில் காண காத்திருக்கிறார்கள்.. போட்டி எதுவும் இல்லாமல் தனியாவே வாங்க தல.. அது போதும்.. ஆனால் சீக்கிரம் வாங்க தல.. ஒரு ரசிகரின் வேண்டுகோள்” என்று தெரிவித்துள்ளார்.