லோக்கல் மோமோஸ் கடையில் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை! ஆச்சரியம் அடைந்த நெட்டிசன்கள்!

கல்லூரி படிப்பை முடித்த பிறகு, ஒரு நல்ல வேலையில் சேர வேண்டும் என்பது, அனைவருக்கும் சவாலான விஷயமாக, சமீப காலங்களாக உள்ளது.

எனவே, இளைஞர்கள் பலரும், விதவிதமான ஆன்லைன் Course -களை செய்து, எப்படியாவது, வேலை கிடைக்க வேண்டும் என்றும், நல்ல சம்பளம் பெற வேண்டும் என்றும் போராடி வருகிறார்கள்.

ஆனால், இங்கு, சாதாரண ஒரு உணவகம் ஒன்று, நல்ல சம்பளத்திற்கு வேலை தருவதாக, போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளது. அதாவது, அம்ரிதா சிங் என்ற பெண், எக்ஸ் தளத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரு நடுத்தரமான கல்லூரியை காட்டிலும், ஒரு உள்ளூர் மோமோஸ் விற்கும் கடை, நல்ல சம்பளத்திற்கு வேலை கொடுக்கிறது என்று கூறி, புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அதில், உதவியாளர் பணிக்கு, ரூபாய் 25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்று ஹிந்தியில், போஸ்டர் ஒன்று கடையின் வெளியே ஒட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான பதிவு, இணைத்தில், பலரது கவனத்தை பெற்று வருகிறது.

RELATED ARTICLES

Recent News