தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரமவுலி என்பவர் தனது சகோதரர்களுடன் 32 ஏக்கர் பரப்பளவில் தக்காளியை பயிரிட்டுள்ளார்.
அங்கு நல்ல விளைச்சல் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் ஏற்றுமதி செய்துள்ளனர். அந்த வகையில் 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டிகள் ஒவ்வொன்றும் ரூ. 1000 முதல் ரூ. 1500 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக தக்காளி விற்பனை செய்ததில் ரூ. 3 கோடி அளவுக்கு ஒரே மாதத்தில் வருமானம் கிடைத்துள்ளதாக சந்திரமவுலி தெரிவிக்கிறார்.
இதேபோன்று தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்த மஹிபால் ரெட்டி என்ற விவசாயி தக்காளியை மட்டும் பயிரிட்டு ரூ. 2 கோடி வருமானம் பெற்றுள்ளார்.