சமந்தாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட குரங்கு..! – வைரலாகும் புகைப்படம்.

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் விஜய் தேவர்க்கொண்டானுடன் குஷி என்ற தெலுங்கு படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் மயோசிடிஸ் நோயின் சிகிச்சைக்காக சினிமாவிலிருந்து ஓராண்டு மட்டும் விலகியிருக்க முடிவு செய்த சமந்தா, ஓய்விற்காக இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவிற்கு தனது தோழியுடன் சென்றுள்ளார்.

அங்கு அவர், இயற்கை சூழலில் குரங்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. குறிப்பாக, குரங்கு ஒன்று சமந்தாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் அவரது ரசிகர்கள், குரங்கும் அவளது அழகில் மயங்கி, ஒரு செல்ஃபி மேடம் என்று கேட்டதோ? இப்படி கமெண்ட் செய்வதோடு அந்த புகைப்படத்தையும் ட்ரெண்ட்டாகி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News