ஜன.15-யில் வடகிழக்குப் பருவமழை நிறைவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு இயல்பை விட 4 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
அக்டோபர் 1-ல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, இந்தாண்டு பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழைபொழிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தென் இந்தியப் பகுதிகளில் ஜன.15இல் வடகிழக்குப் பருவமழை நிறைவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.