நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்திருந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த வெற்றியின் விளைவாக, தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த பாகத்தை, இயக்குநர் சுந்தர் சி இயக்க உள்ளார். மேலும், முதல் பாகத்தில் நடித்த நயன்தாராவே இந்த பாகத்திலும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பட்ஜெட் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. அதன்படி, 55 கோடி ரூபாயில் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்களாம். திரையுலகை சேர்ந்த பலருக்கும், இந்த தகவல், மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.