கடந்த 13-ந்தேதி பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியிலும் ஒரு கும்பல் புகுந்து வண்ண புகை குண்டுகளை வீசினார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரச்சனைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை பாராளுமன்ற கூட்டம் தொடங்கியது. உடனே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சபையை பகல் 12 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், சுப்ரியா சுலே, சசிதரூர், மணிஷ் திவாரி, டிம்பிள் யாதவ் உள்பட 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.