Connect with us

Raj News Tamil

கேரளாவில் மம்மூட்டி, மோகன்லாலை மிஞ்சிய விஜய்!

சினிமா

கேரளாவில் மம்மூட்டி, மோகன்லாலை மிஞ்சிய விஜய்!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம், நாளை இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் மீது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதனால், இப்படம், பல்வேறு வசூல் சாதனைகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில், முதல் நாளில், 2 ஆயிரத்து 263 காட்சிகளுடன் வெளியாக உள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான, மம்முட்டி, மோகன் லாலை காட்டிலும், விஜய்-க்கு தான், அதிக திரையரங்குகள் இந்த முறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், முன்பதிவின் மூலம் மட்டுமே 5.4 கோடி ரூபாயை, கேரள மாநிலத்தில் லியோ வசூலித்துள்ளது. இந்த தகவல், விஜயின் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top