ஒரே மாதத்தில் 1000 பணியாளர்களை டிஸ்மிஸ் செய்த பேடிஎம்

பே.டி.எம். நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்து இருப்பதாக அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 10 முதல் 15 சதவிகித ஊழியர்களுக்கு ஆகும் செலவு குறைக்கப்படுவதுடன், பணியும் சிறப்பாக முடிக்கப்படுவதாக பே.டி.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பணித்திறன் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரம் பணியாளர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கடன் வழங்கும் பிரிவில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News