ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட இந்தியர்களில் சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
இந்த ஆண்டின் ஹஜ் பயணத்தின்போது சுமார் 10 நாடுகளைச் சேர்ந்த 1,081 பேர் பெரும்பாலும் வெயில் காரணமாக உயிரிழந்தனர். அதிகபட்சமாக எகிப்து நாட்டிலிருந்து வந்திருந்த 658 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 630 பேர் பதிவு செய்யாமல் ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள்.
உயிரிழந்தவர்களில் 68 பேர் இந்தியர்கள் என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.