மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 632-ஆக உயர்வு!

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 632-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 329 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மொராக்கோவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.11 மணிக்கு ரிக்டர் 6.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் எனத் தெரிகிறது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

அந்நாட்டின் தலைநகர் ரபாத் முதல் மாரகெச் வரை நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், நாட்டில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளிலும் பயங்கர பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக மொராக்கோவின் உள்துறை அமைச்சகம் பலி எண்ணிக்கை 296 ஆக அறிவித்த நிலையில் தற்போது 632 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 329 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

Recent News