மொராக்கோ நிலநடுக்கம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி!

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் அட்லஸ் மலைத் தொடா் பகுதியில் அமைந்துள்ள மராகெஷ்-சாஃபி பிராந்தியத்தில் வெள்ளிக்கிழமை இரவு 11.11 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 3.41 மணி) நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவானதாக மொராக்கோ நிலநடுக்கவியல் ஆய்வு மையமும், 6.8 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் தெரிவித்தன.

இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதி முழுவதும் குலுங்கியது. அதன் அதிர்வுகள் ஸ்பெயின், போர்ச்சுகல், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 2,012 போ் பலியாகினா்; 2,059-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவா்களையும், பலியானவா்களின் சடலங்களையும் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

RELATED ARTICLES

Recent News