உலக அளவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்தாண்டு விளையாட்டுகளுடன் தொடர்புடைய சொற்களே அதிகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடத்தில் உள்ளதாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து (India vs England) எனும் சொல் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உக்ரைன் போரின் விளைவாக உக்ரைன் (Ukraine) எனும் சொல் மூன்றாவது இடத்தில் உள்ளது.