மனைவியை கூப்பிட வந்த கணவருக்கு 100 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள தமரோட கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரிக்கும், காக்கிநாடாவை சேர்ந்த ரவி தேஜாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

புது மணமக்களை ஆடி மாதத்தில் பிரித்து வைப்பது தமிழக வழக்கம். அந்த வழக்கத்தை தெலுங்கில் வரும் ஆஷாட மாதத்தில் தெலுங்கர்கள் கையாளுகின்றனர்.

இந்நிலையில், ஆஷாட மாதம் முடிந்து விட்ட நிலையில் மாமியார் வீட்டில் இருந்த மனைவியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த கணவனுக்கு அவருடைய மாமியார் நூறு வகை பலகாரங்களுடன் கூடிய விருந்து சாப்பாடு போட்டு அசத்தினார். மாமியாரின் இந்த அசத்தலில் மயங்கிய மருமகன் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.

RELATED ARTICLES

Recent News