கடந்த 2024-ஆம் ஆண்டு அன்று, இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்று ஆட்சியை பிடித்திருந்தாலும், தமிழகத்தில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. இந்நிலையில், Cvoter என்ற நிறுவனம், புதிய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதாவது, இன்று தேர்தல் வைத்தால் கூட யார் வெற்றிப் பெறுவார்கள் என்ற அடிப்படையில், நாட்டு மக்களின் மனநிலை என்ன என்ற பெயரில், கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
ஜனவரி 2 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளில் இருந்தும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தனி நபர்களிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், திமுகவின் கூட்டணி, 38-ல் இருந்து 39 தொகுதிகளை வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆனால், பாஜகவும், அதிமுகவும், ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் திமுகவின் கூட்டணி மிகவும் பலமாக இருப்பது, நிரூபணமாகியுள்ளது.