மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்

கடந்த 2018-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று சிறிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. ஆனால், கடந்த 2020 -ம் ஆண்டு, ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்ததால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி தொடர்கிறது. மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் voters நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த முடிவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 10-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இதையடுத்து மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News