பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து பெங்களூரு திரும்பி பிரஜ்வல் ரேவண்ணாவை கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தனர்.
இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவர். இவர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது.
மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.