பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் வளாகத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் இணைந்து குழுப் புகைப்படத்தை இன்று காலை எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில், மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட அனைத்துக் கட்சி எம்பிக்களும் கலந்து கொண்டனர்.