2023-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். திருவிழா, சமீபத்தில் தொடங்கப்பட்டது. முதல் ஆட்டத்தில் களமிறங்கிய சி.எஸ்.கே அணி, தோல்வியை சந்தித்தது. ஆனால், இரண்டாவது ஆட்டத்தில், அதிரடியாக விளையாடிய சி.எஸ்.கே, தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, சி.எஸ்.கே அணியின் வீரர்களை கடுமையாக எச்சரித்துள்ளார். அதாவது, சி.எஸ்.கே அணியின் பவுலர்கள் அதிகமாக No Ball போடுகிறார்கள். இதனால் அணியின் வெற்றி பாதிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று தோனி பலமுறை கூறிவிட்டாராம்.
இருப்பினும், அந்த அணியின் பவுலர்கள் தொடர்ந்து No Ball-களை போட்டு வருகின்றனர். இப்படியே தொடர்ந்து No Ball-களை போட்டு வந்தால், நீங்கள் வேறு கேப்டன் தலையின் கீழ் செயல்பட வேண்டிய நிலை வரும் என்று எச்சரித்துள்ளார். அதாவது, நான் சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேறி விடுவேன் என்று பவுலர்களை எச்சரித்துள்ளார்.