குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம்.. ராகுலை சந்தித்த விவசாயிகள்..

நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில், அவரை 12 உறுப்பினர்களை கொண்ட விவசாய தலைவர்களின் தூதுக்குழு சந்தித்தது. அப்போது, விவசாயிகள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து, அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு, எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான ராகுல் காந்தி, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் கிடைக்கும் என்று, எங்களுடைய தேர்தல் அறிக்கையில் நாங்கள் குறிப்பிட்டு இருந்தோம். தற்போது நாங்கள் அதனை பகுப்பாய்வு செய்து முடித்துள்ளோம். அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

“இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து, இண்டியா கூட்டணியின் மற்ற தலைவர்களிடம் பேச வேண்டும் என்பதை, நாங்கள் இந்த சந்திப்பின்போது முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

“எங்களை சந்திப்பதற்கு, நாங்கள் தான் அவர்களை அழைத்திருந்தோம். ஆனால், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் விவசாயிகள் எங்களை சந்திப்பதை தடுத்தனர். ஏனென்றால், அவர்கள் அனைவரும் விவசாயிகள். விவசாயிகளை உள்ளேவிடாமல் அவர்கள் தடுத்ததற்கு, இதுகூட காரணமாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News