“எந்த பதவியும் வேண்டாம்” – முகுந்தன் எடுத்த முடிவு?

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தலைவர் அன்புமணி, நிறுவனர் ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், முகுந்தனை இளைஞர் அணி தலைவராக அறிவித்தார்.

ஆனால், அவர் கட்சியில் சேர்ந்த வெறும் 4 மாதங்கள் மட்டுமே ஆகியிருப்பதால், அதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அன்புமணிக்கும், ராமதாஸ்-க்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, குடும்பத்திலும், கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காக, அவர் இளைஞர் அணி தலைவர் பதவியை ஏற்க மாட்டார் என்று, தகவல் கசிந்துள்ளது. மேலும், ஏற்கனவே வகித்து வந்த ஊடகப் பேரவை இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்தும், அவர் விலக உள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே தொடர முகுந்தன் முடிவு செய்துள்ளாராம். தலைவராக இருக்கும் அன்புமணியே எதிர்ப்பு தெரிவிப்பதால், பதவியை ஏற்க முகுந்தன் தயக்கம் காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News