முலாயம் சிங் யாதவ் காலமானார்!

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமானவர் முலாயம் சிங் யாதவ். இதுவரை 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ள இவர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும், 10 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். உ.பி-யின் முக்கிய அரசியல் தலைவராக இருந்து வந்த முலாயம் சிங் யாதவ், உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி, முலாயம் சிங் யாதவ் காலமானார்.

இவரது மறைவு செய்தியை அறிந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.