பொது இடத்தில் முகம் சுழிக்க வைத்த நபர்.. தட்டிக்கேட்ட போலீசுக்கு கத்திக் குத்து!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரை சேர்ந்தவர் ராம் கோண்டே. இவர் கண்டிவாலி பகுதிக்கு வந்தபோது, பொது இடத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இதனை பார்த்து அருவெறுப்படைந்த பொதுமக்கள், அவரை கண்டிக்க முடியாமல், அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர்.

அப்போது, அந்த வழியாக வந்த உதய் என்ற காவலர், இங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளார். இருப்பினும், தொடர்ந்து அவர் சிறுநீர் கழித்ததால், கைது செய்ய முயன்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த நபர், கையில் வைத்திருந்த கத்தியை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மற்ற காவலர்கள், ராம் கோண்டேவை கைது செய்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட காவலர் உதய், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.