மும்பை காவல்துறையில் காவலராக பணியாற்றி வருபவர்கள் சிலர், வாட்ஸ் அப் க்ரூப் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்த க்ரூப்பில், பராப் என்ற காவலர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், பராப்பும், உடன் பணியாற்றும் காவலர் ஒருவரின் மனைவியும், உல்லாசமாக இருந்தது பதிவாகி இருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சக காவலர், மனைவியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு, பராப்புடன் இருந்த கள்ள உறவு குறித்து, அவரது மனைவி ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, பராப் குறித்து நீ புகார் அளிக்க வேண்டும் என்று அந்த காவலர் மனைவியிடம் கேட்டுள்ளார்.
ஆனால், அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால், அந்த சக காவலரே புகார் அளித்துள்ளார். அதில், தன்னுடைய கன்னியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பராப்பும், எனது மனைவியும் நடந்துக் கொண்டுள்ளனர் என்று கூறியிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட மும்பை காவல்துறை, பராப்பை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.