டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றிருந்தவர் ரத்தன் டாடா. இவர், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், விலங்குகளுக்கான சிறிய மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த மருத்துவமனைக்கு, காய்ச்சல் மற்றும் தீவிர ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு, 7 மாத நாய் குட்டி ஒன்று வந்துள்ளது. இந்த நாய்க்கு சிகிச்சை அளிக்க, மிக அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது.
நாய்களின் மீது மிகுந்த அன்பும், அரவணைப்பும் கொண்ட ரத்தன் டாடா, பாதிக்கப்பட்ட நாய்-க்காக தற்போது களமிறங்கியுள்ளார். அதாவது, “மும்பை.. எனக்கு உங்களுடைய உதவி வேண்டும்..” என்றும், நாய்க்கு ரத்தம் தேவைப்படும் விஷயத்தை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாயின் சிகிச்சைக்காக, இந்தியாவின் பிரபலமான தொழில் அதிபரே களமிறங்கியதை பார்த்த நெட்டிசன்கள், அவரது உயர்ந்த உள்ளத்தை பாராட்டி வருகின்றனர்.