ரயிலில் குடுமியை பிடித்து சண்டையிட்ட பெண் பயணிகள்!

மும்பை தானேவில் இருந்து பன்வேல் நோக்கி புறநகர் ரயிலில் 3-பெண் பயணிகள் பயணித்துள்ளனர். இந்த நிலையில் இருக்கையில் அமருவது தொடர்பாக இவர்கள் 3-பேரும் மாறி மாறி கும்மிடி பிடி சண்டை போட்டுள்ளனர்.

பின்னர் சிலர் அடுத்த ரயில் நிலையம் வந்ததும், போலீசாரிடம் புகார் அளித்தனர். அப்போது சாரதா என்ற பெண் போலீஸ் பிரச்சனையை தீர்த்து வைக்க முயன்றுள்ளார்.

ஆனால் அதற்கு சற்றும் மதிக்காத சண்டை போட்ட 3-பெண்கள் சேர்ந்து, தடுக்க வந்த போலீஸ் சாரதாவை சராமாரியாக அடித்து துவம்சம் செய்தனர். தற்போது தடுக்க வந்த போலீசை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.