பட்டப்பகலில் கொலை வெறி தாக்குதல்..பதறவைக்கும் வீடியோ காட்சி

தெலுங்கானா மாநிலத்தில் சந்தோஷ் என்ற இளைஞரை மூன்று பேர் வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளனர். பிறகு அந்த மூன்று பேரில் ஒருவர் சந்தோஷின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த மூன்று பேரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். பொதுமக்கள் ஒன்று கூடியதால் அந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தோஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை முயற்சியில் ஈடுபட்ட பண்டி என்பவர் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சந்தோஷ் உள்ளிட்ட இரண்டு பேர் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று சந்தோஷ் பண்டியை மிரட்டியதால் பண்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷை கொல்ல முயற்சி செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பண்டி, மகேஷ், சன்னி ஆகியோரை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News