Connect with us

Raj News Tamil

வீடு புகுந்து கிரிக்கெட் மட்டையால் 6 பேர் மீது கொலைவெறி தாக்குதல்: பாமக நிர்வாகி குடும்பத்துக்கு வலை!

தமிழகம்

வீடு புகுந்து கிரிக்கெட் மட்டையால் 6 பேர் மீது கொலைவெறி தாக்குதல்: பாமக நிர்வாகி குடும்பத்துக்கு வலை!

மாமல்லபுரம் அடுத்த பெரிய நெம்மேலி பகுதியை சேர்ந்தவர் முருகன் (48). இவர், சென்னை மாநகராட்சியில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். முருகன், அவரது மனைவி முத்தமிழ்செல்வி, மகள்கள் நந்தினி, இலக்கியா. தம்பி மணிகண்டன், தம்பி மனைவி மனோன்மணி ஆகியோர் முருகனின் வீட்டில் அமர்ந்து குடும்ப விஷயம் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாமக நிர்வாகி ஏகாம்பரம், அவரது மகன்கள் ராமதாஸ், மோகன்ராஜ் ஆகியோர் முருகனின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து, முருகன், அவரது மனைவி, மகள்கள், தம்பி, அவரது மனைவி ஆகி யோரை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கி கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இதில், படுகாயமடைந்த 6 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், முருகனுக்கு தலையில் 30க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, மாமல்லபுரம் போலீசில் இரு தரப்பினரும் தனித்தனியாக புகார் மனு அளித்தனர். போலீசார், விசாரணை நடத்திய போது, முருகன் தனக்கு சொந்தமான இடத்தில் மண்ணை கொட்டி சமன்படுத்தி உள்ளார். இதையறிந்த, பாமக நிர்வாகி ஏகாம்பரம் சம்பவ இடத்திற்கு சென்று இந்த இடம் தனக்கு சொந்தமானது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஏற்பட்ட வாய் தகராறில் ஏகாம்பரம் அவரது மகன்களை அழைத்து கொண்டு, முருகனின் வீட்டிற்குள் அத்துமீறி சென்று கிரிக்கெட் மட்டையால் வீட்டில் உள்ள அனைவரையும் சரமாரியாக தாக்கியது தெரிய வந்தது.

இதையடுத்து, பாமக நிர்வாகி ஏகாம்பரம் அவரது மனைவி சண்முகவள்ளி, மகன்கள் ராமதாஸ், மோகன்ராஜ் அவர்களது மனைவி பிரேமா, புஷ்பா மற்றும் அவரது சகோதரி பானுமதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்த, ஏகாம்பரம் வீட்டை பூட் டிவிட்டு குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ஏகாம்பரத்திற்கு வேண்டியவர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகன் மற்றும் அவரது குடும்பத்தாரின் மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அத்துமீறி, வீடு புகுந்து கிரிக்கெட் மட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்ளத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top