சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, சல்மான் கானின் அடுத்த படத்தை அவர் இயக்க உள்ளார்.
இந்நிலையில், இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, எந்த நடிகருடன் இணைய உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி, நடிகர் சூர்யா அல்லது கார்த்தியுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைய வாய்ப்பு உள்ளது.
அதாவது, நடிகர் சூர்யாவை வைத்து கஜினி படத்தின் 2-ஆம் பாகத்தையும், கார்த்தியை வைத்து புதிய கதையையும் அவர் இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
இதில், யாருடைய கால்ஷீட் முதலில் கிடைக்கிறதோ, அவர்களை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.