முருகன் சிலையை மீட்ட வருவாய்துறையினர்!

கடலூர் அருகே, தனியாருக்கு சொந்தமான நிலத்தில், மர்ம நபர்கள் வீசி சென்ற முருகன் சிலையை, வருவாய்துறையினர் மீட்டனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான நிலம் ஒன்று உள்ளது.

அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், தங்களிடம் இருந்த முருகன் சிலையை, அந்த நிலத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறையினர், 4 அடி உயரம் கொண்ட முருகன் சிலையை மீட்டனர். இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, அந்த சிலையை எடுத்து சென்றனர்.

RELATED ARTICLES

Recent News