தமிழக அரசின் 50-வது புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பேற்று கொண்டார்.
தமிழக தலைமைச்செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக முதல்வரின் தனிச் செயலராக பணியாற்றிய நா.முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.