பாபா படத்தில் ஒரு காட்சியில் நடித்த அனிருத் – புகைப்படம் வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ள இவர், பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இவர் பாபா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில், நடனமாடியுள்ளதாக, தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை, அனிருத்தே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.