இசை உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. இவர், சமீபத்தில் லண்டன் நகரில், பிரம்மாண்ட சிம்பொனி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது.
இந்நிலையில், இசைஞானி இளையராஜா, இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பிரதமர் நரேந்திர மோடி ஜியுடன் மறக்க முடியாத சந்திப்பாக இது இருந்தது. என்னுடைய சிம்பொனி நிகழ்ச்சி உட்பட, பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம். அவரது பாராட்டுக்கள் மற்றும் ஆதரவை, பணிவாக ஏற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், இருவரும் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், இளையராஜா பதிவிட்டுள்ளார்.