பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் அதில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி , கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியான லிண்டா கூறும்போது, டுவிட்டரை வாங்கியது என்பது எக்ஸ் எனப்படும் செயலியை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையே என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், எலான் மஸ்க் நேற்று வெளியிட்ட “விரைவில் நாங்கள் டுவிட்டர் பிராண்டிற்கும், படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் (லோகோ) விடை கொடுக்கலாம். நல்ல போதுமான எக்ஸ் லோகோ இன்று இரவு வெளியிடப்பட்டால் அதனுடன் நாளை உலகம் முழுவதும் வருவோம் என்று கூறினார்.வர்த்தக குறியீடாக உள்ள டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் விடை கொடுக்கலாம் என்று எலான் மஸ்க் கூறியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து,ட்விட்டரின் லோகோ வானது மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,தற்போது அதன் பெயரையும் X என மாற்றி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். X.காம் என்ற மஸ்கின் மாற்றமானது ,பல்வேறு கேளிக்கைகளுடன் வைரலாகி வருகிறது .