Connect with us

Raj News Tamil

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தமிழகம்

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா இன்று திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெறும் விழாவின் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, திருப்புவனம், மானாமதுரை, பார்த்திபனூர் வழியில் சாலை மார்க்கமாக பசும்பொன் கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

More in தமிழகம்

To Top