என்னது குக் வித் கோமாளி ரித்திகாவுக்கு கல்யாணம் ஆகிடிச்சா..!

குக் வித் கோமாளி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரித்திகா. பின்னர் ராஜா ராணி, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த இவர், தொடர்ந்து பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் நடித்து பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானர்.

இந்த நிலையில் தொழில்நுட்பக் கலைஞர் வினு என்பவருடன் திருமணம் நடைபெற்றதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனை உறுதிபடுத்தும் விதமாக நடிகை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கனவருடன் மாலையோடு உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தற்போது இவரது ரசிகர்கள் மிஸ்ஸஸ் ரித்திகா என இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.