ஆசியாவில் உள்ள முக்கியமான நாடுகளில் ஒன்றாக இருப்பது மியான்மர். முக்கியமான பல்வேறு சுற்றுலா தளங்களை கொண்ட இந்த நாடு, துறவிகளுக்கான நாடாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த நாட்டின் மண்டாலே என்ற நகரில், நேற்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
7.7 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால், அந்நாட்டில் உள்ள 2 பாலங்கள், துறவிகளுக்கான மடாலயம், பல்வேறு பிரம்மாண்ட கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து, தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, நிலநடுக்கத்தில் சிக்கிய பலியானவர்களின் எண்ணிக்கை, ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணி, தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது.