விக்ரம் படத்தின் சீக்ரெட்டை உடைத்த மைனா! பரபரப்பு!

வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை மைனா நந்தினி. இவர், சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள மைனா, விக்ரம் படப்பிடிப்பில் நடந்த சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், விக்ரம் படத்தில் இடம்பெற்றிருந்த விஜய்சேதுபதியின் வீடு, உண்மையான வீடு. ஆனால், நாங்கள் செட் வீடு என்று தான் நினைத்திருந்துாம் என்று கூறினார்.

மேலும், அந்த படத்தின் இறுதியில், வீடு பாம் வைத்து தகர்க்கப்படுவது போல் காட்சி ஒன்று இருக்கும். அதனை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாக தான் தகர்ப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், உண்மையிலேயே குண்டு வைத்து தான், அந்த வீட்டை தகர்த்தார்கள் என்று மைனா நந்தினி கூறியுள்ளார். இந்த தகவல், ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.