சீனாவில் குழந்தைகளை குறிவைக்கும் மர்ம காய்ச்சல்!

சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சீனாவில் புதிய வகை தீநுண்மியால் ஏற்படும் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகவும், அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களால் மருத்துவமனைகள் நிரம்பி வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சீன குழந்தைகளிடையே வகை கண்டறியப்படாத காய்ச்சல் பரவி வருவதாக சா்வதேச பரவல் நோய் கண்காணிப்பு அமைப்பும் எச்சரித்துள்ளது.

அந்த மா்மக் காய்ச்சல் சுவாசப் பாதை வழியாக பரவுகிர் என்பது குறித்து இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. இருந்தாலும் இந்தத் தகவல்கள் கவலை அளிப்பவையாக உள்ளன.

எனவே, இந்த நோய் தொடா்பான முழு விவரங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சீன அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News