Connect with us

Raj News Tamil

சிக்கலில் சிக்கிய “நா ரெடி” பாடல் !

சினிமா

சிக்கலில் சிக்கிய “நா ரெடி” பாடல் !

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் லியோ.சமீபத்தில் நா ரெடி வரவா என்ற பாடல் வெளிவந்து சமூகவலைதளத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.இதில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் போதைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வடசென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் , சென்னை மாநகர காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்து ,சென்சார் சான்றிதழ் குறித்த தகவலை அறிந்துகொள்ள மத்திய தணிக்கை குழுவையும் அணுகியுள்ளார்.

யு, ஏ, யு/ஏ போன்ற எந்தவித சான்றிதழும் வழங்கப்படவில்லை எனவும், திரைத்துறை தணிக்கை சட்டத்தின் கீழ் வராது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் ,அனுமதி பெறாமல் வெளியாகியுள்ளதால், நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை மனு அளிக்கபோவதாக
ஆர்.டி .ஐ .செல்வம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக “நா ரெடி” பாடலின் லிரிக் வீடியோவில் புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரை கொல்லும் என டிஸ்க்ளைமர் (Disclaimer) இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top