நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வசூல்! இவ்வளவு கம்மியா?

சுராஜ் இயக்கத்தில், வைகைப் புயல் வடிவேலு நடிப்பில், கடந்த 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். பெரும் எதிர்பார்ப்பை பெற்ற இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.

இருப்பினும், குடும்ப ஆடியன்ஸ்கள் நிச்சயம் திரையரங்கிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில், மாண்டஸ் புயல் உருவானதால், பல்வேறு திரையரங்குகளில் கூட்டம், கடுமையாக குறைந்துள்ளது.

இதனால், இந்த திரைப்படம், வெறும் 1 கோடி ரூபாயை மட்டும் வசூலித்துள்ளதாம். இது படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.