விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் : டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி

விக்கிரவாண்டி தொகுதிக்கு கடந்த 10ம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று நடைபெற்று வந்தது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி, 56 ஆயிரத்து 296 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றதுடன் டெபாசிட்டை தக்க வைத்துக்கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அபிநயா 10,602 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்துள்ளார். மேலும் 27 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News