“வெறித்தனமாக இருக்கு” – நானே வருவேன் முதல் விமர்சனம்!

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், தற்போது வெளியாக உள்ள திரைப்படம் நானே வருவேன். இந்த கூட்டணி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெருமளவில் உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக, வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினர் ஒருவர், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘நானே வருவேன்’ படத்தின் சென்சார் பதிவு பார்த்தேன். தனுஷின் நடிப்பை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். 2022ஆம் ஆண்டு அவருடைய ஆண்டுதான்’ என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, திருச்சிற்றம்பலம் படத்தின் மாபெரும் வெற்றியை சந்தித்துள்ள தனுஷின் ரசிகர்களுக்கு, இந்த பதிவு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.