நானே வருவேன் திரைப்படம் எப்படி இருக்கு? – மக்கள் சொல்வது என்ன?

செல்வராகவன், தனுஷ் ஆகிய இருவரும் 5-வது முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் நானே வருவேன். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை, கலைப்புலி எஸ்.தானு தயாரித்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் முதற்காட்சி தற்போது முடிந்துள்ளது. படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், தங்களது விமர்சனங்களை, Youtube சேனல்களுக்கு வழங்கியுள்ளனர். அதில், பாதி பேர் படம் சூப்பராக இருக்கிறது.

செல்வராகவன் கம்பேக். தனுஷ் ஆக்டிங் வேற லெவல் என்றெல்லாம் கமெண்ட் கூறி வருகின்றனர். மீதி பேர், படம் சுமாராக தான் உள்ளது. பெரிய அளவில் எதுவும் இல்லை. இறுதிக்காட்சி மிகவும் சுமாராக இருக்கிறது. தானு சார் சொன்னதெல்லாம் பொய் என்று கூறி வருகின்றனர்.

ஒரு சிலர், படத்தின் முதற்பாதி ரொம்ப சூப்பராக இருந்ததாகவும், இரண்டாம் பாதி மட்டும் சரியாக எடுக்கப்படவில்லை என்று கருத்து கூறி வருகின்றனர். இன்னும் சில நாட்கள் கழித்த பின்னர், படம் உண்மையிலேயே எப்படி உள்ளது என்பது தெரியவரும்…