பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைத்தன்யா! புகைப்படம் வைரல்!

நடிகர் நாக சைத்தன்யாவுக்கும், சமந்தாவிற்கும், கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று விவாகரத்து பெற்று, பிரிந்தனர்.

இதையடுத்து, நடிகை சமந்தாவும், நாக சைத்தன்யாவும், படங்களில் பிசியாக நடித்து வந்தனர். இந்நிலையில், நாக சைத்தன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும், ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, வெளிநாட்டில் இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்களின் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது. இந்த நடிகை, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.